‘இவங்கள மட்டும் கம்மியாகத் தாக்கும் கொரோனா வைரஸ்’... ‘ஆறுதல் தரும் ஆய்வு’... ‘இருந்தாலும் எச்சரிக்கும் நிபுணர்கள்’!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Sangeetha | Mar 16, 2020 05:55 PM

கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை உலக அளவில் 6000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் சில குறிப்பிட்ட வயதினரை மட்டும் குறைந்த அளவே தாக்குவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 

Children less sick from Covid-19, but still spread the virus

சீனாவின் உகான் நகரத்தில் இருந்து அதிவேகமாகப் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பும் இதை கொடிய தொற்று என்று அறிவித்துள்ளது. இந்நிலையில், குழந்தைத் தொற்று நோய் இதழ் பிப்ரவரி மாதம் வெளியிட்டுள்ள ஆய்வில் கொரோனா வைரஸ் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளைக் குறைவாகவே தாக்குகிறது என்றும், அதன் அறிகுறி மற்றும் தீவிரமும் குறைவாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

இதனால் கொரோனா அறிகுறி கொண்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்தால் ஒன்று இரண்டு வாரங்களிலேயே குணமாகிவிடுகிறது. இதுவரை கொரோனா வைரஸ் தாக்கப்பட்டதில், 10 வயதுக்குள் உள்ள எந்த குழந்தையும் இறந்ததாகத் தெரியவில்லை என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் மிகச் சிறிய அளவிலே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இறப்பும் கொரோனாவால் ஒரு சதவிகிதம் என்னும் அளவிலே இருப்பதாக தெரியவந்துள்ளது.

இருப்பினும் குழந்தைகளை வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் முதியவர்களையே அதிகமாகத் தாக்கியுள்ளதாகவும், அதிலும் ஏற்கெனவே தீர்க்க முடியாத வியாதிகளால் பாதிக்கப்பட்டிருப்போரையே அதிகமாகத் தாக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால், கொரோனா வைரஸ் தொற்று வரும், அந்த குழந்தைகளிடமிருந்து, பெற்றோர்கள், பெரியவர்கள் மட்டுமின்றி வீட்டுப் பொருட்களிலும் பரவி மிக அதிக நாள் இந்த வைரஸ் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags : #CORONAVIRUS