"ஹலோ சார், இந்த தெரு பக்கத்துல.." போலீஸுக்கு வந்த போன் கால்.. "ஸ்பாட்'ல போய் பாத்ததும்".. அதிர்ந்த போலீஸ்.. சோதனை பண்ணதுல கெடச்ச ஒரு 'ரசீது'
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் Dallas பகுதியில் உள்ள தெரு ஒன்றில், இளம்பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அங்கு சென்று விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
Dallas பகுதியில் உள்ள தெரு ஒன்றில், இளம்பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக, காலையில் சுமார் 6:00 மணி அளவில், போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, சம்பவ இடம் சென்ற போலீசார் இறந்த பெண்ணை மீட்டு, சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, Andre woods என்ற பெயருடன், ரூம் நம்பர் 414 என எழுதப்பட்ட ஹோட்டல் ஒன்றின் ரசீது, அந்த பெண்ணிடம் இருந்துள்ளது. உடனடியாக, போலீசார் அந்த ஹோட்டலுக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். அப்போது 414 ஆம் அறையிலிருந்த Andre என்பவர், அறையை காலி செய்துவிட்டு சென்றதாகவும் ஹோட்டல் மேனேஜர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, Andre தங்கி இருந்த 414 ஹோட்டல் அறையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த அறைக்குள் ரத்தக் கரையுடன் கூடிய கத்தியையும், சுவர் மற்றும் படுக்கைக்கு அடியில் ரத்தம் சிதறி கிடந்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அது மட்டுமில்லாமல், அறை முழுவதும் ப்ளீச்சிங் பவுடர் போட்டும் சுத்தம் செய்யப்பட்டிருந்தது.
பிறகு Andre என்ற நபரை போலீசார் தேடி வந்த நிலையில், கார் ஒன்றில் அவர் தப்பித்துச் செல்லும் தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து, Andre என்ற நபரை பின் தொடர்ந்து சென்ற போது, அந்த நபர் சென்ற கார் விபத்து ஒன்றில் சிக்கி உள்ளது. இதன் பின்னர், அவரை மீட்டு மருத்துவமனையிலும் போலீசார் சேர்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்த Andre woods சற்று சீரான பிறகு, அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் தனது அறையில் பெண் ஒருவர் இருந்த தகவலை மறுத்த Andre woods, தான் வேற அறைக்கு மாற சென்றதால் ப்ளீச் கொண்டு அறையை சுத்தம் செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால், இறந்த பெண்ணிடம் இருந்து கிடைத்த ரசீது உள்ளிட்ட ஆதாரங்களை காட்டியதும், அந்த பெண் தன்னுடன் இருந்த உண்மையை Andre ஒப்புக் கொண்டார்.
அந்த பெண்ணை தனது அறைக்கு அழைத்து சென்றதாகவும், அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவானதால், அந்த பெண்ணை இருபது முறை கையால் குத்தி மூக்கை உடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் பிறகு காயங்களுடன் அந்த பெண்ணை தனது காரில் அழைத்துச் சென்று, ஒரு இடத்தில் இறக்கி விட்டதாகவும் Andre தெரிவித்துள்ளார்.
ஆனால், தான் இறக்கி விடும்போது அந்தப் பெண் உயிருடன் இருந்ததாகவும் Andre குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள Andre-விடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.