“மண்ணை தின்றதால் உயிரிழந்த குழந்தையை வெளியில் தெரியாமல் மண்ணில் புதைத்த தம்பதியினர்”!.... பதற வைக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | May 03, 2019 12:35 PM

ஆந்திர மாநிலத்தில் பட்டினியால் மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து கொண்டே வருகிறது.

child died because of eating mud due to hungry

ஆந்திர மாநிலத்தில் பசியின் கொடுமையால் மண்ணை திண்ற 2 வயது குழந்தை வயிறு கோளாறு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்ட சாலையோர பகுதியில் மகேஷ் மற்றும் நீலவேணி தம்பதியினர் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.

இந்த தம்பதியினருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். மேலும், நீலவேணியின் அக்காளுடைய மகளும் இவர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், 2 வயதான நீலவேணியின் அக்காள் மகள் வனிதா, பசி கொடுமையால் தரையில் இருந்த மண்ணை அள்ளித் தின்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, வனிதாவுக்கு வயிறு கோளாறு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மகேஷ் மற்றும் நீலவேணி தம்பதியினர் சிறுமி வனிதாவின் உடலை குடிசைக்கு அருகிலேயே புதைத்துவிட்டனர்.

இந்நிலையில், தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரதே பரிசோதனை செய்ததில், பசியின் காரணமாக மண்ணை தின்றதால் வயிறு கோளாறு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #CHILD #DEAD #HUNGER #ANDRAPRADESH