உஷாரு! பிரியாணியால் வந்த சோகம்.. சிறுமி பலி..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 13, 2019 03:06 PM

பிரியாணியை மீண்டும் சுடவைத்து சாப்பிட்டதால், 5 வயது சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அரக்கோணம் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 year old girl dead for eating old biriyani in vellore

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தண்டலம் புதுக் காலனியில் சீனிவாசன் - கனகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது உறவினர் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது நிகழ்ச்சியில் உறவினர்களுக்காக தயாரிக்கப்பட்ட பிரியாணி மீதமாகியுள்ளது. இதனை எடுத்து வந்து சீனிவாசனின் குடும்பத்தினர் அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்ததாகக் கூறப்படுகிறது.

மறுநாள் அந்தப் பிரியாணியை மீண்டும் சுடவைத்த அவர்கள், வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்துள்ளனர். சுடவைத்த பிரியாணியை உட்கொண்ட சீனிவாசனின் மகள் கோபிகா உள்ளிட்ட 4 சிறுவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் 4 குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சீனிவாசனின் 5 வயது மகளான கோபிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரியாணியை சுடவைத்து சாப்பிட்டதால் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : #VELLORE #CHILD #BIRIYANI #DEATH #REHEATED