‘திடீரென எழும்பி கணவரைக் கவ்வி இழுத்துச் சென்ற முதலை’.. ஆற்றில் நடந்த அவலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | Apr 25, 2019 01:39 PM

ஆற்றில் குளிக்கும் போது மனைவியின் கண் முன்னே கணவரை முதலை ஒன்று ஆற்றுக்குள் இழுத்து சென்ற சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

husband has been dragged by crocodile into the river in front of wife

சிதம்பரம் அருகே பெரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜெயமணி. இவர் தன் மனைவி முத்துலட்சுமியுடன் நேற்று இரவு மேலகுண்டலப்பாடி கிராமத்தில் ஓடும்  பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் நீருக்கு அடியில் இருந்து வந்த ஒரு முதலை ஜெயமணியின் காலை கடித்து, பின்பு நீருக்குள் இழுத்து சென்றது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயமணியின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் நேற்று இரவு படகு மூலம் ஆற்றில் சென்று தேடியும் ஜெயமணியின் உடல் கிடைக்கவில்லை.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CROCODILE #CHIDAMBARAM #RIVER