“வீட்ல யாராது இருக்கீங்களா”?... நான்தான் முதல வந்துருக்கேன்! வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Arunachalam | May 07, 2019 05:18 PM

அமெரிக்காவில் ஒருவீட்டின் காலிங்பெல்லை அடிக்க முதலை முயலும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

viral video of crocodile trying to ring the door bell in america

டிக் டிக் யாரது திருடன் என்று நாம் சிறுவயதில் விளையாடியிருப்போம். திருடன் என்று சொல்லும்பாதே, நம்மில் சிலர் பயந்திருப்போம். ஆனால் இங்கு கதவை தட்டியது முதலை. ஆம் அமெரிக்காவில் ஒரு வீட்டின் காலிங்பெல்லை அடிக்க முயன்ற முதலையின் வீடியோ வைரலாக பரவிவருகிறது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் மிர்டில் கடற்கரையை ஒட்டிய பகுதியில் கரென் அப்பேனா என்பவரது வீடு. இவரது வீட்டின் வாசலுக்கு சென்று 6.5 அடி நீளமுள்ள முதலை ஒன்று காலிங்பெல்லை அடிக்க முயற்சி செய்யும். ஆனால் அந்த முதலையால் காலிங்பெல்லை அடிக்க முயலவில்லை.

இதனையடுத்து, சில நிமிடங்கள் அந்த இடத்திலேயே படுத்துவிட்டு பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்நிலையில், இந்த முதலையின் செயலை பக்கத்து வீட்டிலிருந்தவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags : #CROCODILE #UNITED STATES #VIRAL VIDEO