வீட்டு சுவற்றில் கருப்பு நிறத்தில் வழிந்த திரவம்.. பலகையை விலக்கி பார்த்ததும் தம்பதிக்கு காத்திருந்த ஆச்சரியம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்தங்களின் வீட்டின் படுக்கை அறையில் கருப்பாக ஒரு திரவம் வழிவதை பார்த்துள்ள சூழலில், அது என்னவென ஆராய்ந்து பார்த்த போது தம்பதிக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
இங்கிலாந்தில் உள்ள கென்டில் என்னும் பகுதியை சேர்ந்தவர் Andrew Dempsey. இவரது மனைவி பெயர் Kate. இவர்கள் தங்களின் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கருப்பாக ஒரு திரவம் ஏதோ வழிவதை கவனித்துள்ளனர்.
வழிந்த திரவம்
முதலில் அது என்னவென புரியாமல் அவர்கள் குழம்பி போனதாகவும் கூறப்படும் நிலையில், அதில் இருந்து ஏதோ வாசனையும் வந்துள்ளதை அவர்கள் உணர்ந்துள்ளனர். மேலும் வீட்டின் சுவர் உள்ளிட்ட பகுதிகளில் திரவம் வழிந்ததால் அது என்ன என்பதை அறிந்து கொள்ளவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
பலகைகளை அகற்றியதும் காத்திருந்த ஆச்சரியம்..
இதற்காக, அவர்கள் வீட்டுத் தளத்தின் பாதிக்கப்பட்டிருந்த பலகைகளை அகற்றி பார்த்ததாக தகவல்கள் கூறுகின்றது. அப்போது அதற்குள் அவர்கள் கண்ட விஷயம், ஆண்ட்ரூ மற்றும் அவரது மனைவி கேட் ஆகியோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. தரைத் தளத்தில் இராட்சத தேன் கூடுகள் இருப்பதை அறிந்து அவர்கள் வியந்து போயுள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
இதனைத் தொடர்ந்து, அந்த தேன் கூடுகளை அகற்றவும் ஆட்களை ஆண்ட்ரூ தேடியுள்ள சூழலில், அவர்கள் அதிக தொகை கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தங்கள் நண்பர்கள் சிலரின் உதவியுடன் அந்த தேன் கூடுகளை அகற்றவும் ஆண்ட்ரூ மற்றும் கேட் ஆகியோர் முடிவு செய்துள்ளனர். அதன் படி, இந்த தேன் கூடுகளை சுமார் நான்கு வாரங்களாகவும் இந்த பணி நடந்ததாக கூறப்படுகிறது.
Images are subject to © copyright to their respective owners.
கொள்ளைக்காரத் தேனீக்கள்
அப்படி இருக்கையில், ஒரு நாள் காலையில் அதில் தேனீக்கள் இருப்பதைக் கண்டு உள்ளூரில் உள்ள தேனீ வளர்ப்பவர்களையும் அவர்கள் அழைத்துள்ளனர். அப்போது அவர் அதனை பார்த்து விட்டு சொன்ன தகவல், இன்னும் வியப்பை தான் ஆண்ட்ரூ மற்றும் கேட் ஆகியோருக்கு கிடைத்துள்ளது. அதாவது, அங்கே இருந்த தேனீக்கள், கொள்ளைக்காரத் தேனீக்கள் என்றும் அவை தேனைத் திருட வந்துள்ளன என்றும் கூறி உள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
இதனையடுத்து, இந்த தேன் கூடுகளை அகற்றிய பிறகு, மொத்தம் 20 பெரிய குப்பை போடும் கவர் நிறைய தேன் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்றால், ஒருவரை கூட தேனீக்கள் கொட்டவில்லை என்பது தான் அது.