கையில் 6 ஆவது தலைமுறை பேத்தி.. மொத்தமா 230 -க்கும் மேல பேரக் குழந்தைகள்.. உலகையே திரும்பி பார்க்க வெச்ச 98 வயது மூதாட்டி!!
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றைய காலகட்டத்தில் வயதாகும் பலரும் எப்படியாவது பேரன், பேத்திகள் என பேரக் குழந்தைகளை பார்த்து விட மாட்டோமா என ஏங்கிக் கொண்டே இருப்பார்கள். அதே போல, அவர்களுடன் நேரம் செலவிட்டு தங்களின் காலத்தை போக்கவும் ஆசையுடன் இருப்பார்கள்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | போடு.. சினிமாவில் களமிறங்கும் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அப்படி இருக்கையில், மூதாட்டி ஒருவர் தனது ஆறாவது தலைமுறை பேத்தியை பார்த்தது தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
ஆறாவது தலைமுறை குழந்தை
அமெரிக்காவின் கென்டக்கி என்னும் பகுதியை சேர்ந்தவர் மேடெல் என அழைக்கப்படும் கோர்டெலியா மே ஹாக்கின்ஸ் (Cordelia Mae Hawkins). இவர் சுமார் 230 பேரக் குழந்தைகளுக்கு மேல் தனது வாழ்வில் பார்த்துள்ள சூழலில் சமீபத்தில் புதிதாக பிறந்த மற்றொரு பேரக் குழந்தையை கையில் தூக்கி கொஞ்சுவது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
98 வயதாகும் மேடெல், தனது 16 வயதில் 50 வயதான ஆணை முதல் முறையாக திருமணம் செய்து கொண்டார். அந்த கணவருக்கு ஏற்கனவே 10 குழந்தைகள் இருந்த சூழலில், அவருக்கும் மேடெலுக்கும் 13 குழந்தைகள் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மொத்தம் 23 குழந்தைகளுக்கு தாயாக வாழ்ந்து வந்துள்ளார் மேடெல்.
Images are subject to © copyright to their respective owners.
வைரல் ஆகும் புகைப்படம்
இந்த நிலையில் தான் அவருக்கு தற்போது 106 பேரக் குழந்தைகள், 222 கொள்ளுப் பேரக் குழந்தைகள், 234 கொள்ளு கொள்ளு பேரக் குழந்தைகள் 37 கொள்ளு-கொள்ளு-கொள்ளுப் பேரப் பிள்ளைகள் அமெரிக்காவின் பல பகுதிகளில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் கடந்த பல ஆண்டுகளில் மேடெலின் குடும்பம், 6000 க்கும் மேற்பட்ட சந்ததியினரை வழங்கி உள்ளதாக தகவல் கூறும் நிலையில், அவரது குடும்பமும் மேலே மேலே வளர்ந்து கொண்டே செல்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
அப்படி இருக்கையில், 98 வயதாகும் மேடெல், தனது கைகளில் பிறந்து ஏழு வாரமே ஆன ஜாவியா விட்டேக்கர் என்ற குழந்தை உள்ளது. மேலும் இந்த குழந்தை தான் மேடெலின் முதல் உயிரியல் ஆறாம் தலைமுறை கொள்ளுப் பேத்தி ஆவார். அதாவது அவருக்கு பிறந்தவர்களுக்கு பிறந்த பேத்தி என தெரிகிறது. மேலும் மேடெல் தனது வாழ்க்கையில் கணவர் மற்றும் பிள்ளைகள் பலரின் இறப்பையும் பார்த்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.