கல்யாணமாகி 4 நாள் தான் ஆச்சு.. விருந்துக்கு போன புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிசா மாநிலத்தில் திருமணமாகி 4 நாட்களே ஆன, புதுமண தம்பதி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் கவலப்பு வேணு. 26 வயதான இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்து அதன்படி பெண் பார்த்தும் வந்திருக்கின்றனர். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள பெர்ஹாம்பூர் பகுதியை சேர்ந்த ப்ரணிதா எனும் இளம் பெண்ணுடன் வேணுவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இருதரப்பிலும் கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்தன.
Images are subject to © copyright to their respective owners.
வேணு - ப்ரணிதா ஆகியோரின் திருமணம் பிப்ரவரி 10 ஆம் தேதி மணமகனின் சொந்த ஊரில் நடைபெற்றிருக்கிறது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு தம்பதியை வாழ்த்தியுள்ளனர். இந்த சூழ்நிலையில் திருமணம் முடித்து மணமகளின் வீட்டுக்கு விருந்திற்கு செல்ல புதுமண தம்பதி முடிவெடுத்திருக்கின்றனர். அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் வேணு மற்றும் அவரது மனைவி ப்ரணிதா கிளம்பிச் சென்றிருக்கின்றனர்.
அப்போது, ஒடிசா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொலந்தாரா கிராமம் அருகே தம்பதி சென்றுகொண்டிருந்த போது, திடீரென ட்ரக் ஒன்று குறுக்கே வந்திருக்கிறது. அதன்மீது இரு சக்கர வாகனம் மோதவே, வேணு மற்றும் அவரது மனைவி ப்ரணிதா படுகாயமடைந்தனர். இதில் ப்ரணிதா அதிகப்படியான காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் வேணு உடனடியாக பெர்ஹாம்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Images are subject to © copyright to their respective owners.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வேணு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த கொலந்தாரா காவல் நிலைய அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். மோதலுக்கு காரணமாக இருந்த ட்ரக்கை ஓட்டிவந்த நபரை கைது செய்திருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர். திருமணமாகி 4 நாளில் புதுமண தம்பதி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
