3 வருசமா வீட்டை விட்டு வெளிய வராத பெண்.. பக்கத்து வீட்டுல தனியா இருக்கும் கணவர்.. VIDEO CALL-ல தான் பேசுவாங்களா?".. திடுக் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தையும் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று கடுமையாக பாதித்திருந்தது. லட்சக்கணக்கான மக்கள் இதன் மூலம் கடும் அவதிப்பட்ட சூழலில், அடுத்தடுத்து இரண்டாம் கட்ட அலைகளும் உருவாகி ஒன்றிரண்டு ஆண்டுகள் உலக நாடுகளே ஸ்தம்பித்து போனது.

பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் உலக நாடுகளை பெரும்பாடு படுத்தியிருந்தது. தொடர்ந்து, தற்போது அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தற்போது செய்துள்ள செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் சுஜன் மாஜி. இவரது மனைவி பெயர் முன்முன் மாஜி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளனர். அப்படி ஒரு சூழலில் கொரோனா தொற்றின் போது தனிமனித இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை முன்முன் மாஜி மிக தீவிரமாக கடைபிடித்ததாக தகவல்கள் கூறுகின்றது. அப்படி இருக்கையில் கொரோனா பரவல் முடிந்து இயல்புநிலை திரும்பி இருந்தாலும் முன்முன் மாஜி வீட்டை விட்டு வெளியே வரவில்லை என தகவல்கள் கூறுகின்றது.
கணவர் சுஜன் தன்னுடைய மனைவியிடம் பலமுறை கூறியும் பயனளிக்கவும் இல்லை. நாட்கள் செல்ல செல்ல அவர் சரியாகிவிடுவார் என்றும் சுஜன் கருதி வந்த சூழலில் அலுவலகம் சென்று வந்த சுஜனையும் முன்முன் வீட்டுக்குள் சேர்க்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. வீட்டை பூட்டிக் கொண்டு தன்னுடைய மகனுடன் முன்முன் வாழ்ந்து வந்த சூழலில், அவரது வீட்டுக்கு அருகே வேறு வழியில்லாமல் வாடகை வீடு ஒன்றையும் எடுத்து தங்கி வந்துள்ளார் சுஜன்.
அதேபோல மனைவி மற்றும் மகனுக்காக காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வீட்டு கதவருகே வைத்து விட்டு சென்று சுஜன் விடுவாராம். மேலும் தன் மனைவி மற்றும் மகளுடன் வீடியோ கால் மூலமாகவும் அவர் பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னால் முடியாமல் போக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சுஜன். போலீசார் மற்றும் குழந்தைகள் நலத்துறை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வீட்டிற்கு வந்தும் முன்முன் மாஜி கதவைத் திறக்கவில்லை என சொல்லப்படுகிறது. தொடர்ந்து வேறு வழியின்றி போலீசார் கதவை உடைத்துச் சென்று அவர்களை மீட்டு வந்த சூழலில் கவுன்சிலிங் கொடுத்து மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் சொல்லப்படுகிறது.
கொரோனா தொற்றின் பெயரில் மூன்று ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் பெண் குறித்த விஷயம், அப்பகுதி மக்களை திடுக்கிட வைத்திருந்தது.

மற்ற செய்திகள்
