செல்ல நாய்க்கு ஏற்பட்ட பாதிப்பு.. மருத்துவ செலவுக்காக வீட்டையே விற்க முடிவெடுத்த நபர்.. என்ன மனுஷன்யா..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் தன்னுடைய வளர்ப்பு நாயின் மருத்துவ செலவுக்காக தன்னுடைய வீட்டையே விற்க முடிவெடுத்திருக்கிறார் ஒருவர். இது குறித்த அவருடைய பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | என்ன ரங்கா பழசை மறந்துட்டியா.. சீண்டிய ஆஸி.. ஆகாஷ் சோப்ராவின் பங்கமான கமெண்ட்😅..!
இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜாக்சன். சிறைத்துறை அதிகாரியான இவர் தன்னுடைய வீட்டில் ராம்போ, ராக்கி எனும் இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார். தனிமையில் வசித்து வரும் ஜாக்சனுக்கு இந்த நாய்கள் இரண்டுமே உற்ற தோழனாக இருந்திருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் ரம்போவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ராம்போவை அனுமதித்திருக்கிறார் ஜாக்சன். ராம்போவிற்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அதற்கு குடல் அழற்சி நோய் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
மேலும் உடலில் போதிய திரவ ஆதாரம் இல்லாததால் உடல் பாகங்களுக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருப்பதும் மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தொடர் சிகிச்சையில் இருந்து வந்த ராம்போ சில தினங்களுக்கு முன்னர் கண்விழித்து பார்த்திருக்கிறது. ஆனால் சிறிது நேரத்திலேயே மீண்டும் அது மயக்கம் அடைய, ஜாக்சன் கலங்கிப் போய்விட்டார்.
Images are subject to © copyright to their respective owners.
அப்போது தான் ராம்போவின் குடலின் ஒரு பகுதி அழுகி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சையும் செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். காப்பீடு செய்து இருந்த போதிலும் தொடர் சிகிச்சை காரணமாக ஜாக்சனிடம் இருந்த மொத்த பணமும் கரைந்துள்ளது. ஆனாலும் எப்படியாவது தனது நாயை குணப்படுத்தி விட வேண்டும் என ஜாக்சன் முயற்சித்து இருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இதனையடுத்து இணையம் மூலமாக அவர் நிதி திரட்டவும் முயற்சித்திருக்கிறார். இருப்பினும் அதில் கிடைத்த பணமும் மருத்துவ செலவுக்கு போதாது என்பதால் தன்னுடைய வீட்டை விற்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். தற்போது தன்னுடைய காரிலேயே தங்கி வருவதாகவும், எப்படியேனும் தன்னுடைய நாயை குணப்படுத்த முயற்சி செய்துவருவதாகவும் ஜாக்சன் சொல்லியிருப்பது பலரையும் கலங்கடித்துள்ளது.