'எங்க ஊருல வைரஸ் பாதிப்பில்ல', 'ஆனா வைரஸோட பேரு தான் பிரச்சனை' ... கொரோனா என்னும் பெயரால் தவிக்கும் கிராம மக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரசின் பெயரை போன்று தங்களது கிராமத்தின் பெயரும் இருப்பதால் தாங்கள் அதிகம் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏப்ரல் மாதம் 14 -ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பேர் இந்தியாவில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாவட்டம் சீதாபூர் மாவட்டத்தில் கொரோனா என்ற சத்தத்தின் ஒலிப்பது போல கோரவுனா என்ற கிராமம் உள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தால் கோரவுனா கிராமத்திலுள்ள மக்கள் பாகுபாட்டை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கிராமத்திலுள்ள ஒருவர் கூறுகையில், 'நாங்கள் கோரவுனா கிராமத்தில் உள்ளவர்கள் என்று யாரிடமாவது கூறினால் அவர்கள் எங்களை தவிர்க்கிறார்கள். கோரவுனா என்பது வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. அது ஒரு கிராமத்தின் பெயர் என்பது மற்றவர்களுக்கு புரியவில்லை. தொலைபேசி அழைப்பின் போது எங்கள் ஊர் பெயரைச் சொன்னால் நாங்கள் கிண்டல் செய்வதாக நினைத்து கொள்கிறார்கள்' என்றார்.
மேலும், 'சாலையில் செல்லும் போது காவல்துறையினர் எங்களிடம் எங்கே செல்கிறாய் என கேட்கும் போது பதிலுக்கு கோரவுனாவுக்கு செல்கிறோம் என்று சொன்னால் எங்களை அமைதியாக பார்க்கின்றனர். எங்களது கிராமத்திற்கு இத்தகைய பெயர் இருந்தால் நாங்கள் என்ன செய்வது' என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
