'நான்கே நாளில் ஐந்திலிருந்து 7 லட்சமாக உயர்வு..'. 'அதிர்ச்சியை' ஏற்படுத்தும் 'வேகம்...' 'முன்பை' விட 'தீவிரமானது' தாக்கம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 30, 2020 10:11 PM

உலக நாடுகளில் கொரோனா வைரசின் வேகம் முன்னிலும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. கடந்த 26 ஆம் தேதி வரை 5 லட்சத்துக்கும் குறைவாகவே இருந்த கொரோனா பாதிப்பு, நான்கே நாட்களில் 7 லட்சத்தை கடந்துள்ளது.

world wide covid 19 case postive increase 7 lakhs

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 199 நாடுகளை தாக்கியுள்ளது.  இதில் அமெரிக்கா  மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தான் கொரோனா உச்சபட்ச கொடூரத்தை நிகழ்த்தி வருகிறது.

அமெரிக்காவில் மட்டும் சுமார் ஒன்றேகால் லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேரில் ஒருவர் அமெரிக்கர் ஆவர். இதில் நியூயார்க் மாகாணத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது.  ஸ்பெயினில் இதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.அங்கு வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோன பிரிட்டனையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரஸ் தொற்றால் நிலைமை மேலும் மோசமாகும் என தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்,  தேவைப்பட்டால் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 52 ஆயிரத்து 288 ஆக உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்துள்ளது. எனினும் சுமார் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 688 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags : #CORONA #WORLD WIDE #POSITIVE #INCREASE #7 LAKHS