‘இதுவும் நல்லாத்தேன் இருக்கு..!’.. மொட்டை மாடியில் அமர்ந்துகொண்டு குரங்கு பார்த்த ‘விநோத’ காரியம்.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 16, 2020 10:32 PM

குரங்கு ஒன்று நூலைப் பிடித்து பட்டம் விடும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

Monkey flying a kite during corona lockdown video goes viral

உலகை புரட்டி போட்டுள்ள கொரோனாவுக்கு பயந்து அனைவரும் ஊரடங்குக்கு பணிந்து வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், மனிதர்களுக்கு போரடிப்பதால் வீட்டில் அதைச் செய்தும் இதைச் செய்தும் வீடியோக்களை எடுத்து பதிவிடுகின்றனர். அப்படித்தான் தற்போது விலங்கினங்களுக்கும் பலத்த போரடித்திருக்கக் கூடும் என்று யோசிக்கும் அளவுக்கு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம், பட்டப் பகலிலே மொட்டை மாடியில் அமர்ந்துகொண்டு ஒற்றைக் குரங்கு ஒன்று ஒய்யாரமாய் பட்டம் விட்டுக்கொண்டிருந்த பரபரப்பு காட்சிதான்

இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குரங்கை பார்த்த சிலர் உற்சாக கோஷமெழுப்பிக் கத்திக்கொண்டிருந்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத குரங்கு, பட்டம் விடுவதில் மும்முரமாய் இருந்தது.