'தமிழகத்தில் 1,267 பேருக்கு கொரோனா...' '15 பேர் பலி...' 'இன்று' மட்டும் '25 பேருக்கு' கொரோனா தொற்று உறுதி...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு 1,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில், இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,267 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 62 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று, மொத்தம் 180 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 15 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 16ம் தேதிக்கான மாவட்ட வாரியான கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,
சென்னை – 217 (இன்று 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது)
கோயம்புத்தூர் – 127 (1 இன்று)
திருப்பூர் - 8 (1 இன்று)
ஈரோடு – 70
திண்டுக்கல் – 65
திருநெல்வேலி – 58 (1 இன்று)
செங்கல்பட்டு – 50
நாமக்கல் – 50 (5 இன்று)
மதுரை – 44 (3 இன்று)
திருச்சி – 43
தேனி– 41
கரூர – 41
திருவள்ளூர் – 41 (1 இன்று)
ராணிபேட்டை – 39
நாகப்பட்டினம் – 38
தூத்துக்குடி – 26
விழுப்புரம் – 24 (1 இன்று)
சேலம் – 24 (2 இன்று)
கடலூர் – 20
வேலூர் – 19 (3 இன்று)
தஞ்சாவூர் – 18 (1 இன்று)
திருப்பத்தூர் – 17
விருதுநகர் – 17
திருவாரூர் – 17
கன்னியாகுமரி – 16
திருவண்ணாமலை – 12
சிவகங்கை– 11
ராமநாதபுரம் – 10 (3 இன்று)
நீலகிரி – 9
தென்காசி – 9
காஞ்சிபுரம் – 8
கள்ளக்குறிச்சி – 3
அரியலூர் – 2
பெரம்பலூர் – 1
