‘ஏப்ரல்ல’ நடத்த முடியலன்னாலும்... எங்கே, எப்போது நடக்க ‘வாய்ப்பு?’... ‘ஐபிஎல்’ போட்டிகள் குறித்து வெளியாகியுள்ள ‘புதிய’ தகவல்...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Mar 18, 2020 06:00 PM

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் ஜூலை அல்லது செப்டம்பர் மாதங்களில் வெளிநாட்டில் நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Corona Outbreak BCCI Looking At July September Window For IPL2020

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனாவால் இந்தியாவில் இந்த மாதம் 29ஆம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் மேலும் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ஐபிஎல் நிர்வாகத்தினருக்கு போட்டிகளைக் குறைக்க விருப்பமில்லை எனக் கூறப்படுகிறது. அத்துடன் இந்தியாவிலும் இப்போதைக்கு போட்டிகளை நடத்தும் சூழல் இல்லாததால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஜூலை, செப்டம்பர் மாதங்களில் வெளிநாட்டில் நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், இவை அனைத்துமே கொரோனா வைரஸ் பாதிப்பை பொறுத்தே முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #IPL #MSDHONI #VIRATKOHLI #CORONAVIRUS #IPL2020