இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 02, 2020 11:59 AM

1, சாதி, மதம் பார்த்து கொரோனா வருவதில்லை; வதந்தி பரப்புவது நம்மை நாமே அழித்து கொள்வதை போன்றது என்றும் சாதி, மதம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

News Headlines april 2 இன்றைய முக்கியச் செய்திகள்

2, இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 450 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 1965 ஆக அதிகரித்தது.

3, இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41லிருந்து 50ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,834லிருந்து 1,965ஆக உயர்ந்துள்ளதோடு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 151 ஆக உள்ளது. 

4, இந்திய வீரர்கள் மட்டுமே இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆலோசனை தெரிவித்துள்ளது. 

5, இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுள் தமிழ்நாடு 3வது இடம் பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் 335, கேரளாவில் 265, தமிழ்நாட்டில் 234, கர்நாடகாவில் 110 பேரும் கொரோனாவால் பாதிகப்பட்டுள்ளனர். 

6, சேலம் மாநகர எல்லைக்குள் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக்கடைகளை நடத்த தடை அறிவித்துள்ளது சேலம் மாநகராட்சி நிர்வாகம்.  இதே போல் மதுரையிலும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை இறைச்சி கடை நடத்த தடை விதித்து இறைச்சி விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

7, பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை, அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. கொரோனா மூலம் ஏற்பட்ட இளம் வயது உயிரிழப்பு இதுவாகும்.

8, தேனி பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும்  தயார் செய்யப்பட்டிருந்த இட்லி, பொங்கல் சாப்பிட்டு உணவின் தரத்தை, அங்கு உணவு உட்கொண்டு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உறுதி செய்தார். மேலும் வீடு தேடி மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தேனியில் தொடங்கிவைத்தார். 

9, நாளை (ஏப்ரல் 3) காலை 9 மணிக்கு வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு சில தகவல்களை பகிரவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Tags : #CORONA #CORONAVIRUS #NEWS #HEADLINES