'தொடங்கியது கொரோனா நிவாரணம்'...'தினமும் எத்தனை பேருக்கு'...'ரூ.1000 கூட என்னெல்லாம் இருக்கு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 02, 2020 12:04 PM

தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக 1000 ரூபாயுடன், ரேஷன் பொருட்கள் இலவசமாக கொடுக்கும் திட்டம் இன்று முதல் தொடங்கியது.

Corona Lockdown : 1000 rs for Corona relief fund distribution started

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.1,000 நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் நிவாரணத் தொகை 1000 ரூபாயுடன், ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கியது.  ரேசன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் தெரு வாரியாக பிரிக்கப்பட்டு, டோக்கன் வழங்கப்பட்டு இந்த பொருட்கள் வழங்கப்படுகின்றன. 1000 ரூபாயுடன் மக்ககளின் அன்றாட தேவையான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதற்கிடையே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காகவும் தினமும் 70 முதல் 100 ரேஷன் அட்டைகளுக்கே ரூ.1,000 மற்றும் பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக அரசு ரூ.1,882 கோடியே 90 லட்சத்து 73 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #CORONA #CORONAVIRUS #RATION SHOP #CORONA RELIEF