'இது என்ன புது தலைவலி...' இவங்களுக்கெல்லாம் 'அறிகுறிகளே இல்லை...' மீண்டும் உலகை 'பீதியில் ஆழ்த்தும்' சீனா...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 02, 2020 12:42 PM

சீனாவில் புதிதாக வைரஸ் பாதித்த 1541 பேருக்கு வைரஸ் பாதித்த அறிகுறிகளே தெரியவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நாட்டு மக்களை பீதியடைய செய்துள்ளது.

China announces 1500 cases of viral infection without symptoms

சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரசால், அங்கு சுமார் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். வைரஸ் பாதிப்பால் 3312 பேர் உயிரிழந்தனர். சுமார் 76 ஆயிரம் பேர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர். தற்போத சீனாவில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வருகிறது. சமீப நாட்களாக அங்கு ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்ற செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

இந்நிலையில் சீன தேச சுகாதாரத்துறை ஆணையம் வெளியிட்ட அறிக்கை மக்களை பீதியடைய செய்துள்ளது. அதில், அறிகுறிகள் இல்லாமல் கொரோனா வைரசால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது. அறிகுறிகளே தென்படாமல் இந்த வைரசால் 1541 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 205 பேரும் உள்ளடங்குவர். இவர்கள் யாருக்கும் வைரஸ் பாதிப்பிற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதைத்தவிர வெளிநாடுகளில் இருந்து வந்த 35 பேருக்கும் உள்நாட்டில் ஒருவருக்கும் அறிகுறிகளுடன் கூடிய பாதிப்பு உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக எண்ணிய நிலையில் சீன அரசின் இந்த அறிவிப்பு நாட்டு மக்களை மட்டும் அல்லாமல் இதர நாடுகளையும் கதிகலங்க செய்துள்ளது.

Tags : #CORONA #CHINA #WITHOUT SYMPTOMS #VIRAL INFECTION