சமூக இடைவெளியை '2022 வரை' கடைப்பிடிக்க 'நேரிடும்...' '2025-ல்' மீண்டும் 'கொரோனா' தாக்க வாய்ப்பு... 'ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில் தகவல்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 17, 2020 12:52 PM

வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், 2022 வரை சமூக இடைவெளியை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என  ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

Corona attack again in 2025-Harvard University scientists predict

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் குறித்து கணித கணக்கீடுகளின் அடிப்படையில் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வொன்றை மேற்கொண்டனர். அதன் முடிவுகளில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி. 2025-ம் ஆண்டில் கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெற்று தாக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

மேலும், சமூக இடைவெளி விடுவதை உடனடியாக தளர்த்தினால், அது புதிய கொரோனா நோயாளிகள் பெருமளவில் உருவாக வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த புதிய சிகிச்சை முறைகள் எதுவும் இல்லாத நிலையில், 2022-ம் ஆண்டு வரை சமூக இடைவெளியை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சமூக இடைவெளியை கோடை காலத்தின்போது தளர்த்தினால், அது குளிர்காலத்தில் ‘புளு’ காய்ச்சல் சீசனுடன் இணைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாகவும்  அவர்கள் கூறியுள்ளனர்.