'இன்னும் கொஞ்ச நாள்ல திவால் ஆகியிருக்கும்'!.. ஆனா, இப்போ!?.. சொடக்கு போடுற நேரத்தில... விண்ணை முட்டுமளவுக்கு அசுரத்தனமான வளர்ச்சி!.. எப்படி?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Feb 09, 2021 06:39 PM

11 ஆண்டு காலமாக லாபமே இல்லாமல் இயங்கிய 'பிளிங்க்' நிறுவன பங்குகள், கடந்த 8 மாதங்களில் மட்டும் 3000 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த அசுர வளர்ச்சிக்கான காரணம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

blink charging company no revenue post 3000 percent gain in 8 months

பிளிங்க் சார்ஜிங் கோ நிறுவனத்தின் பங்குகள்தான், இப்போது அமெரிக்காவின் மிக பரபரப்பான பங்குகளில் ஒன்றாகும். பிளிங்க் நிறுவனம், அதன் 11 ஆண்டுகால வரலாற்றில் ஒருபோதும் தனது வருடாந்திர லாபத்தை வெளியிடவில்லை.

கடந்த ஆண்டு இந்நிறுவனம் திவாலாகிவிடக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டது. மேலும், பெரும்பாலான தனது சந்தைப் பங்குகளையும் அது இழந்தது. மிகக் குறைவான வர்த்தகம் காரணமாக வருவாயையும் இழந்தது. சமீபத்திய ஆண்டுகளில் நிர்வாக சிக்கல்களிலும் சிக்கியது.

ஆனால், தடாலடியாக தற்போது முதலீட்டாளர்கள் கடந்த எட்டு மாதங்களில் பிளிங்கின் பங்கு விலையை 3,000 சதவீதம் உயர்த்தியுள்ளனர். 2700 பங்குகளில் தற்போது ஏழு பங்குகள் மட்டுமே உள்ளது. இதன் மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளன.

பிளிங்க் நிறுவனத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணம், பிளிங்க் ஒரு மின் ஆற்றல் நிறுவனம். மின்சார வாகனங்களை இயக்க தேவைப்படும் சார்ஜிங் நிலையங்களின் உரிமையாளர் மற்றும் ஆபரேட்டர் இந்த அமைப்பை உருவாக்கிக் கொள்கின்றனர். நிதிச் சந்தைகளில் தற்போது மின்சார வாகன தொழில்களின் பங்குகள் விலை தடாலடியாக உயர்ந்து வருவதால், பிளிங்க் பங்குகளின் விலையும் விண்ணை முட்டுமளவு உயர்ந்திருக்கிறது.

திங்கட்கிழமை நிலவரப்படி 2.17 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்துடன், பிளிங்க் நிறுவன மதிப்பு உள்ளது. ஒரு பங்கு அதிகமாக மதிப்பிடப்படுகிறதா என்பதைக் கண்டறியும் அளவீடான பொதுவான மெட்ரிக் மதிப்பீடு பிளிங்க் நிறுவனத்திற்கு 481 ஆக உயர்ந்துள்ளது. உலகின் மிகவும் பணக்கார மதிப்பீட்டைக் கொண்ட டெஸ்லா நிறுவனத்தின் மெட்ரிக் மதிப்பு வெறும் 26 மட்டுமே ஆகும்.

 

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Blink charging company no revenue post 3000 percent gain in 8 months | World News.