"நாம் கேள்விப்படுவது 20%க்கும் குறைவே..." "இதுதான் தற்போதுள்ள மிகப்பெரிய சவால்..." 'வல்லுநரின் அதிர்ச்சித் தகவல்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 30, 2020 10:46 AM

கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் உலக நாடுகள் 20 சதவீதத்துக்கும் குறைவான அளவையே வெளிஉலகுக்கு சொல்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

Countries reducing the number of people infected with the corona

தொற்றுநோய் பரவல் கணித பகுப்பாய் வில் வல்லுனராக திகழக்கூடிய ஆடம் குச்சார்ஸ்கி என்பவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்ப மண்டல மருத்துவ கல்லூரியின் இணை பேராசிரியராக இவர் பணியாற்றி வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவல் பற்றிய அவரது பார்வையும், கருத்துகளும் உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

மலேரியா காய்ச்சலைக் கட்டுப்படுத்த எப்படி கடைசி கொசுவையும் கொன்றுவிட வேண்டும் என்ற தேவையில்லையோ, அதே போலத்தான் கொரோனா வைரஸ் பரவலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு விட்டாலே தானாக குறைந்து விடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றவர்களுக்கு பரப்பாமல் குணமடைய சாத்தியமான சூழலை ஏற்படுத்துவதே, வேகமான பரவைலைக் கட்டுப்படுத்துவதற்குரிய மிகச் சிறந்த வழி எனக் கூறியுள்ளார்.

தொற்றுநோய் பரவல் கணிதத்தை பொறுத்தமட்டில், ஸ்பானிஷ் புளூ, சார்ஸ் அல்லது எபோலா போன்ற வைரசில் இருந்து கொரோனா வைரஸ் எப்படி மாறுப்பட்டிருக்கிறது என்றால் அது தொற்றின் ஆரம்பத்திலேயே, அதாவது அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பாகவே அல்லது லேசான அறிகுறிகள் தென்படுகிறபோதே நிறைய பேருக்கு பரவி விடுகிறது என்பதுதான்.

சமீபத்தில் நாங்கள் நடத்திய சில தோராய மதிப்பீடுகளை பொறுத்தவரை, கொரோனா வைரஸ் பாதித்துள்ள பல நாடுகளில், பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே வெளி உலகுக்கு சொல்லப்படுகிறது என்று நினைக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் போன்ற கொடிய தொற்று நோய் பரவுவதற்கும், இது போன்ற போலியான தகவல்கள் பரவுவதற்கும் ஒற்றுமை  உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #CORONA #ENGLAND #COUNTRIES #REDUCING #INFECTED PEOPLE