BREAKING: 'தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா உறுதி!'... பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு!!... முதலமைச்சர் பரபரப்பு பேட்டி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 30, 2020 01:03 PM

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

tn covid19 cases surges to 67 cm eps press meet

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளாதாக தெரிவித்தார். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக ஈரோட்டில் 10, சென்னையில் 4, மதுரையில் 2, திருவாரூரில் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் பலியாகியுள்ள நிலையில், 5 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

கொரோனா அறிகுறி இருப்பவர்கள் 121 நபர்களின் பரிசோதனை முடிவுகள் வர இருக்கின்றன.

25 லட்சம் N95 மாஸ்க்குகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

30 ஆயிரம் பரிசோதனை கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

வெளிமாநில தொழிலாளர்களுக்கு இருப்பிட வசதிகளும், உணவுத் தேவைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.