"அடுத்த சுற்று தாக்குதல் பயங்கரமாக இருக்கும்..." "எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்..." 'பிரபல' மருந்து நிறுவன 'சிஇஓ எச்சரிக்கை'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 30, 2020 04:11 PM

கொரோனாவின் 2வது சுற்று தாக்குதலை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவார்டிஸ் சிஇஓ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The world must be ready to face Corona\'s 2nd round Attack

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த நோவார்ட்டிஸ் (Novartis) நிறுவனத்தின் சிஇஓ-வான வசந்த் நரசிம்மன், கொரோனா வைரஸ் பரவலின் முதல் அலை வரும் மாதங்களில் முடிவுக்கு வந்தாலும், அதைத் தொடர்ந்து 2வது அலை வரும் என்பதால் உலகம் ஆயத்தப் பணிகளோடு தயாராக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் நோய்ப் பரவல் தற்போது உச்ச நிலையில் இருப்பதாகவும், அமெரிக்காவில் இது மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நோவார்ட்டிஸ் நிறுவனத்தின் மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின், கொரோனா வைரசை கொல்லும் என முதல்கட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த மருந்தை விரைந்து அதிகமாக தயாரிக்க கோரிக்கைகள் வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதற்காக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தை நோவார்ட்டிஸ் நிறுத்தி வைத்திருப்பதாக கூறினார்.

Tags : #CORONA #NOVARTIS #MEDICINE #HYDROXYCHLOROQUINE #CEO