‘கொரோனாவுக்கு பலி!’.. ‘புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரின் மரணத்தால் கலங்கிய ரசிகர்கள்!’.. ‘இரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்!’.. ஜப்பானில் சோகம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Mar 30, 2020 11:51 AM

ஜப்பானின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Japanese comedian Ken Shimura passed away in Tokyo due to COVID19

தற்போது இருக்கும் உலகம் இருக்கும் இந்த சூழ்நிலையினை மக்கள் முன்பைக் காட்டிலும் இலகுவாக எடுத்துக்கொள்வதற்கும், அத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து போவதற்கும் அவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் தேவைப்படுகின்றன. அவற்றுள் முக்கியமான கருவி நகைச்சுவை சினிமாக்களும், டிஜிட்டல் நகைச்சுவை காரணிகளான மீம்ஸ் உள்ளிட்டவையும்தான்.

நகைச்சுவையாளர்கள் எந்த சூழலையும் கடப்பதற்கு மக்களை தயார்படுத்துவார்கள். அப்படிப்பட்ட புகழ்பெற்ற ஜப்பானிய நகைச்சுவைக் கலைஞரும் நடிகருமான KenShimura கடந்த 23-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். ஏற்கனவே நிமோனியாவால் பாதிக்கப்பட்டு கடந்த 20-ஆம் தேதி முதலே சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்த அவர் நேற்றிரவு பரிதாபகரமாக உயிரிழந்தார். கொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு பலியான முதல் ஜப்பானிய திரைக்கலைஞரான இவருக்கு 70 வயது. இவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள்

இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags : #CORONAVIRUS #CORONA #KEN SHIMURA