மறுபடியும் 'மொதல்ல' இருந்தா?... 'கொரோனா' வெற்றியை... நாய்,பூனை, வவ்வால்கள் 'விற்பனையுடன்' கொண்டாடும் சீனர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Mar 29, 2020 10:34 PM

கொரோனாவுக்கு எதிரான வெற்றியை கொண்டாட சீனர்கள் மீண்டும் நாய்,பூனை, வவ்வால்களை விற்பனை செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர்.

Chinese markets again selling bats and slaughtering rabbits

கடந்த வருட இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் உலக மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர். சீனாவில் தற்போது ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் சீனாவில் மீண்டும் நாய், பூனை, வவ்வால், தேள், முயல் ஆகியவைகளை மீண்டும் விற்க ஆரம்பித்து உள்ளனர். சீனாவின் குயிலின் மார்க்கெட்டில் நாய், பூனை ஆகியவைகளை சலுகையுடன் விற்க ஆரம்பித்து இருக்கின்றனர். சீனாவின் வுஹான் மார்க்கெட்டில்  தான் உலகின் முதல் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

ஆனால் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவுடன் மீண்டும் மார்க்கெட்டுகளில் சீனர்கள் வவ்வால்கள், பூனைகள்,நாய்கள் விற்பனையை தொடங்கி விட்டனர். குறிப்பாக கொரோனா வைரஸை பரப்பியதாக கூறப்படும் வவ்வால்களையும் சீனர்கள் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் உலக நாடுகள் பலவும் அதிர்ச்சி அடைந்துள்ளன.