'சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ்...' 'வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் பரவல்...' கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் மீண்டும் 4 பேர் உயிரிழப்பு...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸின் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம் என்று சீனா அறிவித்த நிலையில் மீண்டும் புதியதாக 31 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா வைரஸ், சீனாவின் உஹான் மாகாணத்தில் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியது. கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவிய இந்த வைரஸால் இதுவரை 723,319 மக்கள் உலகெங்கும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 33,993 பேர் கோவிட் 19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் மட்டும் 81,740 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 75,770 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதில் உயிரிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,304 ஆக இருந்தது.
கடந்த வாரம் சீனா வெளியிட்ட அறிக்கையில் 'பல ஆயிரம் உயிர்களை இழந்த நிலையில் நாங்கள் தற்போது கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறோம்' என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது மேலும் 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் மேலும் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 30 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என தெரிவித்துள்ளனர். மேலும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பட்டியல் 723 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலை சீனாவை மட்டும் இல்லாமல் உலக நாடுகளை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.