'கொரோனாவிலிருந்து குணமடைந்த 90% பேருக்கு இந்த பிரச்சனை'... 'வுஹான் ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சி தகவல்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் வுஹான் நகரில் கொரோனாவிலிருந்து குணமடைந்த 100 பேரில் 90 பேருக்கு நுரையீரல் சேதம் அடைந்திருப்பது தெரியவந்துள்ளது

சீனாவின் வுஹான் நகரில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள 100 பேரை வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவமனை கடந்த ஏப்ரல் மாதம் முதல் கண்காணித்துவந்துள்ளது. அவர்களின் சராசரி வயது 59 எனக் கூறப்பட்டுள்ளது.
ஜூலையுடன் முடிந்த கண்காணிப்பின் முதல் கட்ட முடிவில், அந்த 100 பேரில் 90 பேருக்கு நுரையீரல் சேதம் அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களின் நுரையீரல் காற்றோட்டம் மற்றும் வாயு பரிமாற்ற செயல்பாடுகள் ஆரோக்கியமாக உள்ள மற்றவர்களின் நிலைக்கு மீளவில்லை என இந்த ஆய்வை நடத்திய டாக்டர் பெங் ஜியோங் தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு பிறகும் ஆக்சிஜன் எந்திரங்களை நம்ப வேண்டியுள்ளதாக பீஜிங் பல்கலைக்கழகத்தின் டோங்ஸிமென் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் லியாங் டெங்ஸியாவ் கூறியுள்ளார். அத்துடன் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களில் 65 வயதுக்குட்பட்டோரில் 10 சதவீதம் பேரின் உடலில் நோய் எதிர்ப்பு பொருள் (ஆன்டிபாடி) மறைந்து விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
