“செத்துப்போனு கழிவறையில விட்டுட்டு போன அம்மா!”.. 20 வருஷத்துக்கு பின் மகளுக்கு தெரியவந்த அதிர்ச்சி தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jul 28, 2020 10:57 PM

குழந்தையாக இருக்கும்போது தாயால் பொதுக் கழிவறையில் கைவிடப்பட்ட பெண் ஒருவர் தன் ஊடன் பிறந்தோரை பல வருடங்கள் கழித்து தேடி கண்டுபிடித்த போது அவரது தம்பி கூறிய தகவல்கள் மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளன.

woman left for dead in public toilet by her mother in 1962

பிரிட்டனில் பாத் என்கிற பகுதியில் வாழும் ஃபி பீஸர் என்கிற பெண் தான் வளர்ந்த போது, தான் ஒரு தத்தெடுக்கப்பட்ட பெண் என்பது அவருக்கு தெரிய வந்தது. பின்னர் தன்னுடைய வளர்ப்புப் பெற்றோர்கள் உண்மையான பெற்றோர்கள் அல்ல என்கிற உண்மையை அறிந்த அப்பெண் தனது தாய் தன்னை 1962 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கழிவறை ஒன்றில் சாகட்டும் என விட்டுவிட்டு சென்றதையும் அதன்பின்னர் அழுகை சத்தம் கேட்டு ஒருவர் தன்னை காப்பாற்றி வளர்த்து வந்துள்ளார்கள் என்பதையும் அறிந்து கொண்டுள்ளார்.

இதனை அடுத்து தன் பெற்றோரையும், உடன் பிறந்தவர் யாரேனும் இருக்கிறார்களா என பல வருடங்களாக தேடியுள்ளார். அதன்பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் உதவியால் தனக்கு மூன்று தங்கைகளும் ஒரு தம்பியும் இருந்ததை அறிந்து கொண்டவர் அவர்களைத் தேடி சந்தித்துள்ளார். அப்போது தன்னுடைய தம்பியிடம் பேசியபோது, தான் தன் அம்மா, பெற்றோர் மற்றும் தம்பி தங்கைகளை பல வருடங்கள் மிஸ் பண்ணிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போதுதான் அவருடைய தம்பி சில அதிர்ச்சிகரமான உண்மைகளை அவரிடம் பகிர்ந்துள்ளார். அதன்படி, “அக்கா நீங்கள் எதையும் மிஸ் பண்ணிவிடவில்லை. அந்த 20 ஆண்டுகளில் வீட்டில் நாங்கள் கொடுமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்தோம்” என்று கூறி அதிர வைத்துள்ளார். ஆம் தங்களின் தந்தைக்கு ஏற்கனவே ஒரு மனைவியும் இருந்ததாகவும், அந்த மனைவிக்கு தெரிந்து அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அந்தப் பெண்ணுக்கு தவறான வழியில் வந்தவர்கள்தான் நாம் இருவரும் என்று தன்னுடைய அக்காவிடம் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தான் எப்போது தாய் வீட்டுக்கு போனாலும் ஒரு முறை கூட தன்னுடைய தாய் தனக்கு தேநீர் தந்ததில்லை என்றும் தங்கள் தந்தையின் மனைவிதான் அம்மா போல கவனித்துக் கொண்டார் என்று அவர் மட்டும் இல்லை என்றால் தாங்கள் என்ன ஆகி இருப்போம் என்பதே தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது தம்பி ஸ்டீபன் சொன்னதைக் கேட்ட ஃபி பீஸர் தன்னுடைய கடந்தகாலத்தை நினைத்துள்ளார். தன்னுடைய தாய் தன்னை கழிவறையில் சாகட்டும் என விட்டுச் சென்றபோது அவர் எந்த பக்கம் சென்று இருந்தாலும் நிச்சயம் தனது அழுகுரல் கேட்டிருக்கும்தானே என்று கண்கலங்கினார். சிறுவயதில் குழந்தையாக இருந்தபோது கழிவறையிலே விடப்பட்ட ஃபி பீஸர் அங்கேயே இருந்திருந்தால் குளிரினாலும் ரத்தப்போக்கு ஏற்பட்டும் இறந்து போயிருப்பாள் என்று மருத்துவரள் கூறியதாக பத்திரிகைகளில் அப்போது செய்திகள் வெளியிடப்பட்டடன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman left for dead in public toilet by her mother in 1962 | World News.