'சீன எழுத்துக்களோடு வரும் மர்ம பார்சல்...' 'உள்ள நகை வச்சிருக்கோம்...' 'ஓப்பன் பண்ணி பார்த்தா...' - மக்கள் பேரதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீன எழுத்துக்களோடு, பெயரிடப்படாத முகவரியில் இருந்து விதை பார்சல்கள் அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த மக்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படும் சம்பவம் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2020 ஆண்டு தொடங்கியது முதல் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் கடும் மோதல்கள் நடந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ். அந்த வைரசால் சீனாவை விட பல மடங்கு பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. மேலும் இந்த மோதல்கள் துாதரகங்களை மூடுவது வரை சென்றுள்ளது.
இந்நிலையில் தற்போது அடுத்த அதிர்ச்சியாக, அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டனில் உள்ள மக்களுக்கு சீன எழுத்துக்களுடன் மர்ம விதைகள் அடங்கிய, 'பார்சல்' அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் ஒரு சில பார்சல்களின் வெளியே தங்க ஆபரணங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதை திறந்து பார்த்தால் விதைகள் இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்த விதைகள் உள்ள பார்சல்கள் அமெரிக்காவின் டெக்சாஸ், கொலராடோ, அலபாமா, ப்ளோரிடா, லோவா, ஜார்ஜியா, கன்சாஸ் உள்ளிட்ட, 28 மாகாணங்களை சேர்ந்த பலருக்கு, கடந்த சில நாட்களாகவே இம்மாதிரியான பார்சல்கள் வந்து கொண்டிருப்பதாக அந்நாட்டு செய்தி ஊடங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மட்டுமல்லாமல் கனடா மற்றும் பிரிட்டனிலும், இது போன்ற மர்ம விதைகள் கொண்ட பார்சல், பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக பண்ணை தொழிலில் ஈடுபடும் பலருக்கும் இதுபோன்ற சீன மொழியுடைய பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து கனடா உணவு கண்காணிப்பு அமைப்பு, 'அதை யாரும், நிலத்தில் பயிரிட வேண்டாம்; அது விவசாயத்தை அழிக்கும் உயிரி ஆயுதமாக இருக்கலாம்' என எச்சரித்துள்ளது. மேலும் தெரிந்தவர்களிடம் இருந்தோ, 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்களிடம் இருந்தோ வரவில்லை' என, அதை பெற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தொடர் சம்பவங்கள் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், வாங் வென்பின், கூறும்போது 'எங்களின் சீன நாடு தபால் மூலம் விதைகளை அனுப்புவது இல்லை. மேலும் பார்சல்களின் மேல் உள்ள சீன தபால் முத்திரைகள் போலியானவை என, எங்கள் தபால் துறை தெரிவித்துள்ளது. அடுத்தகட்டமாக விரிவாக ஆய்வு செய்து, விபரங்களை தெரிவிப்போம் என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
