'கனவில் வந்த மாமியார், மாமனாரால்'... '6 வயது மகளை'... 'பெண் செய்த உறையவைக்கும் காரியம்'... 'வெளிவந்த அதிர்ச்சி வாக்குமூலம்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவண்ணாமலையில் குழந்தையை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த தம்பதி கலையரசன் - சுகன்யா. இவர்களுக்கு 6 வயதில் நிவேதா என்ற மகள் உள்ளார். ஓராண்டுக்கு முன்னதாக கலையரசனின் தந்தை, தாய் இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சுகன்யாவை சமைக்க சொல்லிவிட்டு கலையரசன் வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்புறம் மனைவியும், மகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து பதறிப் போயுள்ளார்.
இதையடுத்து அவர் இருவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு நிவேதா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த சுகன்யா மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து சென்னையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் சுகன்யா போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.
சுகன்யா தனது வாக்குமூலத்தில், "இறந்துபோன மாமியார், மாமனார் அடிக்கடி தன் கனவில் வந்து, தங்களுடன் வந்துவிடுமாறு அழைத்ததாலேயே குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றாகக் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சுகன்யாவிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கனவில் வந்த மாமியார், மாமனார் அழைத்ததாக கூறி, குழந்தையை கொலை செய்த தாயின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
