VIDEO: “மனைவி, மகளை கதறவிட்டு போகும் நபர்!”.. போக விடாமல் தடுக்கும் பெண்.. இறுதியில் மகள் சொன்ன வார்த்தை!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருப்பதி போலீஸ் ஸ்டேஷனில் மனைவியை குழந்தையை தத்தளிக்கவிட்டுவிட்டு காதலியுடன் பைக்கில் தப்பிச் சென்ற கணவனைத் தடுக்க பெண் ஒருவர் மகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திருப்பதி கிழக்கு காவல் நிலையத்துக்கு 8 வயது மகளுடன் சென்ற சரஸ்வதி என்பவர் தனது கணவர் வெங்கடாஜலபதி, வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டதை அடுத்து, போலீஸாரிடத்தில் புகார் அளித்துள்ளார். அவர்களோ மகளிர் காவல் நிலையத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்த, பின்னர் வெங்கடாஜலபதி தன் காதலியுடன் பைக்கில் செல்ல முயற்சித்தார்.
அவரை மறித்து சரஸ்வதி சண்டையிட, அவர் யாருக்கு சொந்தம் என்கிற சண்டை இரு மனைவிகளுக்கும் இடையில் உருவானது. சரஸ்வதியும், அவரது மகளும் வெங்கடாஜலபதியை பிடித்து இழுத்தும் பயனில்லை. அவரோ காதலியுடன் செல்வதிலேயே குறியாக இருந்துள்ளார். பின்னர் காதலியுடன் பைக்கில் சென்றுவிட்டார்.
இதனால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கதறி அழுத சரஸ்வதியை பார்த்த அவரது மகள், ‘அப்படிப்பட்ட அப்பா வேண்டாம். அவரது நம்பரை முதலில் போன்ல இருந்து டெலிட் பண்ணுங்கம்மா’ என்று கூறி தேற்றியுள்ளார்.

மற்ற செய்திகள்
