“எப்பவுமே குடிக்குறவங்க இல்ல.. ஆனா!”...வெறும் வயிற்றில் மது அருந்திய இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரிட்டனில் 27 வயதான இளம் பெண் வெறும் வயிற்றில் மது குடித்ததால், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிரிட்டனின் பிரைட்டைனைச் சேர்ந்த அலைஸ் புர்ட்டன் ப்ராஃபோர்டு எனும் 27 வயதான இவர் கடந்த மாதம் தன் வீட்டில் கவலைக்கிடமான உயிரிழந்தார். இறப்பதற்கு முன் இவர் வெறும் வயிற்றில் மது அருந்தியுள்ளார். அதன் காரணமாக அவர் சிக்கலான ஆல்கஹால் கெட்டோ அசிடோசிஸால் மிகவும் அலைஸ் அவதிப்பட்டார். ஆனால் அதிகம் குடிக்காத அலைஸ் புர்ட்டன் ப்ராஃபோர்டு, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கக் கூடிய இவர், யாருமே எதிர்பார்க்காத நிலையில், உயிரிழந்துள்ளார்.
இறப்பதற்கு முன்வரை சைக்கிள் பயணங்களில் பிஸியாக இருந்த அவர் ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவர் எப்போதுமே குடிப்பவர் அல்ல என்றும்,அதே சமயம், அதிகம் சாப்பிடாத அவரது வயிற்றில் ஒரு அமிலம் தூண்டப்பட்டதால், தோட்டத்துக்கு வெளியே சென்று அங்கேயே உயிரிழந்தார் என்று அவரது 8 வருட நண்பர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
