அமெரிக்க அதிபர் தேர்தலில்... சீனாவின் ரகசிய திட்டமா 'இது'?.. வெளியான 'பகீர்' தகவலால்... டிக்-டாக் மீது உச்சகட்ட கோபத்தில் ட்ரம்ப்!.. பரபரப்பு பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கல்வான் மோதலையடுத்து இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இவற்றை தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவின் இந்த முடிவுக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்தது. மேலும், தங்கள் நாட்டிலும் டிக்டாக்கை தடை செய்ய ஆலோசனை நடந்து வருவதாக அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிக்டாக் செயலி மூலம் சீனா தலையிட வாய்ப்புள்ளதாக குடியரசு கட்சி செனட் சபை உறுப்பினர்களும் அச்சம் தெரிவித்தனர். அதனால் அந்த செயலியை தடை செய்வது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என அதிபருக்கு அவர்கள் கடிதம் எழுதியிருந்தனர். இதனிடையே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உளவு கருவியாக டிக்டாக் செயலி செயல்பட்டு வருவதாக பல்வேறு நாடுகளும் தொடர் புகார் எழுப்பின. இதற்கு சீனா மற்றும் டிக்டாக் நிறுவனம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் டிக்டாக் செயலியை விரைவில் தடை செய்ய முடிவெடுத்துள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சீன உளவுத்துறையின் கருவியாக இந்த செயலி இருக்கக்கூடும் என அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளதால், டிக்டாக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். இதற்கான நடவடிக்கை 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கும் வகையில் இந்த செயலி இருப்பதாக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்ததையடுத்து அதிபர் ட்ரம்ப் இத்தகைய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
