அலெர்ட்...! 'கண்டிப்பா இது அவங்களோட வேலை தான்...' கரெக்ட்டா 'அந்த நாள்'ல ஏன் இப்படி பண்றாங்க...? - மிரள விட்ட நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின் போது சீனாவும், தைவானும் பிரிந்தன. ஆனாலும், தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா தொடா்ந்து கூறி வருகிறது.
அதுமட்டுமல்லாமல், அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா தொடர்ந்து மிரட்டி வருகிறது.
மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி புகுந்து மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், சீனாவின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சீனா அதிகாரப்பூர்வமாக தனிநாடாக 1949 ஆம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நாளை தேசிய தினமாக சீனா கொண்டாடி வருகிறது.
இந்த நிலையில், தேசிய தினம் நேற்று (01-10-2021) கொண்டாடப்பட்ட நிலையில் சீன போர் விமானங்கள் தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி புகுந்தது. மொத்தம் 38 சீன போர் விமானங்கள் தைவான் வான் எல்லைக்குள் நுழைந்தன. நேற்று காலையும், இரவும் சீன விமானங்கள் தைவானுக்குள் நுழைந்துள்ளன.
சீனாவின் ஜே-16 போர்விமானங்கள், குண்டுகளை வீசும் எச்-6 ரக போர்விமானங்கள் உள்பட 38 போர் விமானங்கள் தங்கள் நாட்டின் எல்லைக்குள் நுழைந்ததாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்த விமானங்களை இடையில் வழிமறிக்கும் விதமாக தைவான் போர் விமானங்கள் களம் இறக்கப்பட்டதாகவும், ஏவுகணை அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாகவும் தைவான் கூறியுள்ளது.