'சர சரவென பறந்த அதிநவீன ஜெட் விமானங்கள்'... 'சீனாவின் ஆட்டம் ரொம்ப அதிகமா இருக்கு'... போர் மூளும் அபாயம்!
முகப்பு > செய்திகள் > உலகம்19 போர் விமானங்களைச் சீனா தங்களது வான்வெளிக்குள் அனுப்பியதாகத் தைவான் குற்றம் சாட்டியுள்ளது.

சீனா அத்துமீறிச் செய்த விஷயங்களால் சீனா, தைவான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தைவானின் வான்வெளியில் 19 போர் விமானங்களைச் சீனா அனுப்பியது தைவானைக் கோபமடையச் செய்தது. தைவான் பாதுகாப்பு அமைச்சகம் அளித்த தகவலின் படி, வியாழக்கிழமை சீனாவின் 12 J-16 போர் விமானங்கள் மற்றும் இரண்டு அணுசக்தி திறன் கொண்ட H-6 விமானங்கள் உட்படப் பல ஜெட் விமானங்கள் தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் நுழைந்துள்ளது.
இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், சீனாவை எச்சரிப்பதற்காகவும் தைவான் தனது விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களை அனுப்பி எச்சரிக்கை செய்தது. இந்த ஆண்டு இதுவரை 100க்கும் மேற்பட்ட சீன விமானங்கள் தைவான் வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தைவானைத் தனது மாகாணங்களில் ஒன்றாகக் கருதும் சீனா, அவ்வப்போது இதுபோன்ற செயல்கள் மூலம் தைவானைச் சீண்டி வருகிறது. இதனிடையே சுயாட்சி நாடான தைவான், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இராணுவத்திற்கான நிதியை 8.7 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் சீனாவுடன் அதிகரித்து வரும் பதற்றத்தின் பின்னணியில் புதிய ஏவுகணைகளுக்கான நிதி உட்படப் பாதுகாப்புத் துறைக்கான நிதியை அதிகரித்திருக்கிறது தைவான்.

மற்ற செய்திகள்
