அட பாவிங்களா...! 'இப்படி எங்கள இருட்டுல உலாவ விட்டுட்டீங்களே...' தம்பி, மார்ச் மாசம் வரைக்கும் 'இந்த' நிலைமை தான்...! 'கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க...' - திணறும் நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகளவில் சீனா பெரும் அதிகாரத்தை செலுத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இருளில் சிக்கித் தவித்து வருகிறது. சீனாவில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையால் பகல் பொழுது முழுவதும் சீனாவில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

மேலும், லியோனிங் மாகாணத்தில் வீடுகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதோடு, தெரு விளக்குகள் மற்றும் சிக்னல் விளக்குகள் என எதுவும் வேலை செய்யாத காரணத்தால் நகரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலைகளில் எரிந்து கொண்டிருந்த மின்விளக்குகளும் திடீரென எரியாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுள்ளது.
சீனாவின் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அமலில் இருக்கும் நிலையில் மக்கள் பணிக்கு செல்லவும், அன்றாட வாழ்க்கையில் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சீனாவில் அதிகமாக 20 மாடிகள், 30 மாடிகள் என உயர்ந்து நிற்கும் கட்டடங்களில் லிப்ஃட் வசதியின்றி குடியிருப்புவாசிகள் தவித்து வருகின்றனர்.
சீனா உலகளவில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு காரணம் அதன் உற்பத்தி திறன் தான். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள மின் தடையால் சீனாவின் பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்திக் குறைப்பு அல்லது உற்பத்தி நிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது.
சில தொழிற்சாலைகள் வாடகை ஜெனரேட்டர்கள் மூலம் இயங்கி வந்தாலும் ஜெனரேட்டர்களின் மின்சாரத்திற்கான செலவை இரு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் களத்தில் உலகமே பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கினாலும், சீனா அப்போதும் வளர்ச்சியே அடைந்து வந்தது. ஆனால், இந்த மின்தடை காரணமாக சீனாவின் கட்டுமான வளர்ச்சிக்கு பெரிதும் தேவைப்படும் இரும்பு மற்றும் சிமெண்ட் உற்பத்தி தடைபட்டுள்ளது. மேலும், சர்வதேச அளவில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆர்டர்களை முடித்துத் தரவேண்டிய கட்டாயத்தில் சீன நிறுவனங்கள் உள்ளன.
சீனாவின் இந்த மின்தடை பிரச்சனை வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது. இதனால் தற்போது கிடைக்கும் குறைந்த மின்சாரத்தை மிக சிக்கனமாக உபயோகிக்க வேண்டும் என சீன அரசு நிர்பந்தித்து வருகிறது.
மேலும், பொதுமக்கள் இயற்கையான ஒளியை பயன்படுத்துமாறும், குறைந்த அளவில் குளிர்சாதன வசதியை உபயோகிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சீனாவின் இந்த நிலைக் குறித்து ஜப்பானின் நொமுரா நிதி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த மின்தடை அதன் பொருளாதாரத்தை இருளில் தள்ளிவிடும் எனவும், 2021-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் சீன பொருளாதாரம் 4,4 லிருந்து 3 சதவீதமாக குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
