பல்வேறு கட்ட இடர்பாடுகளுக்கு பின் நிறைவேறும் 'மருத்துவர் சைமனின்' கடைசி விருப்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 22, 2020 09:44 PM

அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சைமன் கொரோனா பாத்திபால் சென்னையில் உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலை நல்லடக்கம் செய்ய, மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்தன.

Bishop Permits to bury doctor simon corpse in Kilpauk cemetery

பலரும் இந்த சம்பவம் வேதனை அளிப்பதாக பதிவு செய்தனர்.  பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை என்று பதிவிட்டிருந்தார். இதனிடையே தன் கணவர் இறப்பதற்கு முன்னர், தனது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக சைமனின் மனைவி ஆனந்தி சைமன் கண்ணீர் மல்க, தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலைம்‘கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யலாம்’ என்றும் அவருக்கு கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய முழு ஒத்துழைப்பு தரப்படும் என்றும் அதன் பேராயர் ஜார்ஜ் அந்தோணி அனுமதி அளித்து அறிவித்துள்ளார்.