“தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா!”.. சென்னையில் மட்டும் 373 ஆக உயர்வு! முழு விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 22, 2020 07:40 PM

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 22) மட்டும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Corona Positive Cases and other details updates in TN April 22

தமிழகத்தில் ஏப்ரல் 22 -ஆம் தேதியான இன்று மட்டும்  33 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 59 ஆயிரத்துக்கும் மேலான பரிசோதனைகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர இதுவரை தமிழகத்தில் கோரொனாவில் இருந்து மீண்டு குணமானவர்களின் எண்ணிக்கை 662-ஆகவும், சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 946 ஆகவும், இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 18 ஆகவும் உள்ளது. இந்நிலையில் சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை மமொத்தமாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது.