'அக்டோபர் 15 வரை'... 'உணவங்கள் மூடப்படுவதாக வெளியான தகவல்'... மத்திய அரசு விளக்கம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 22, 2020 07:28 PM

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் அக்டோபர் 15-ம் தேதி வரை ஹோட்டல்கள், உணவகங்கள் மூடப்படுவதாக வெளியான தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Fake Ministry Of Tourism Circular Claims Restaurants Shut Till October

இதுகுறித்து மத்திய சுற்றுலாத்துறை கூறியுள்ளதாவது, ‘சுற்றுலா அமைச்சகத்தின் பெயரில் போலி கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, சுற்றுலாத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் அக்டோபர் 15-ம் தேதி வரை ஹோட்டல்கள், உணவகங்கள் மூடப்படுவதாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக தொடர்ந்து பரப்பப்படுகிறது. இந்த விவகாரம் சுற்றுலா அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்ததுள்ளது. சுற்றுலா அமைச்சகத்தினால் அத்தகைய கடிதம் எதுவும் வெளியிடப்படவில்லை என்று அந்த அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இதேபோல் வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற போலிச் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்தப் போலித் தகவல் சுற்றறிக்கை குறித்து சுற்றுலா அமைச்சகம் ஏற்கெனவே சமூக ஊடகங்களில் மறுப்புகளை வெளியிட்டுள்ளதுடன், மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகாரும் அளித்தது. ஆனால் போலிச் செய்தி மீண்டும் பரப்பப்படுகிறது. இதுபோன்ற செய்திகளைப் புறக்கணிக்குமாறும், அதிகாரப்பூர்வத் தகவல் தொடர்புகளை மட்டுமே நம்புமாறும் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்றும் தெரிவித்துள்ளது.