"ஊரடங்கை தளர்த்தாதீர்கள்..." "குளிர்காலத்தில் 2வது அலை வீசக்கூடும்..." "விளைவுகள் மோசமாக இருக்கும்..." 'அமெரிக்காவை' எச்சரிக்கும் 'மருத்துவர்கள்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 22, 2020 09:22 PM

அமெரிக்காவில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போதைய நிலையை விட மோசமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Corona\'s second wave may blow- Doctors who warn America

அமெரிக்காவில் தற்போது வரை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவை தளர்த்த கோரி நடைபெற்றுவரும் போராட்டங்களை தொடர்ந்து பல மாகாணங்களில் கட்டுப்பாட்டை தளர்த்த திட்டமிட்டுள்ளனர். தற்போதைய சூழலில் ஊரடங்களை தளத்துவது மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கை தளத்தினால் கொரோனா பரவும் வேகம் மேலும் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊரடங்கு தளர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மருத்துவ நிபுணர்கள், வரவிருக்கும் மாதங்களில் அமெரிக்காவில் கொரோனாவின் இரண்டாம் அலை வீச வாய்ப்பிருப்பதால் தனிமனித இடைவெளியை தொடருவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போதைய நிலையை விட மோசமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வரவிருக்கும் குளிர்காலத்தில் ஏற்படும் கொரோனா வைரஸ் தாக்குதல், தற்போதைய சூழலைவிட மிகவும் வீரியத்துடன் இருக்கும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தலைவர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் தெரிவித்துளார்.