"டாக்டர்...! வயித்து வலி உசுரு போகுது, ஹெல்ப் பண்ணுங்க... "'ஸ்கேன்' பண்ணி பாத்ததுல... சாப்பிட்ட மீனு உள்ள போய்...! - ஆடிப்போன 'மருத்துவர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் முழுவதும் வேகாத மீனை உண்டதால் தனது கல்லீரல் பாதியை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீன நாட்டை சேர்ந்த 55 வயதான ஒருவர், தான் வயிற்று வலி காரணமாக கடுமையாக அவதிப்பட்டு வந்த நிலையில், அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை அணுகியுள்ளார். கடந்த நான்கு மாதங்களாக தான் கடும் அவதிக்குள் ஆவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவரை பரிசோதித்த போது அவருக்கு வயிற்றுப் போக்கு மற்றும் பசியின்மை அறிகுறிகள் தென்பட்டன. தொடர்ந்து, அவரை ஸ்கேன் செய்து பார்த்த போது மருத்துவர்கள் கடும் பதற்றமடைந்தனர். அவரது இடது கல்லீரலில், சீழ் நிறைந்திருக்கும் நிலையில் அதில் கட்டி உருவாவதையும் அறிந்து கொண்டனர்.
முன்னதாக அந்த நபர், அதிகம் வேகாத மீனை உண்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக, அவரது வயிற்றிற்குள் சென்ற மீனில் காணப்படும் ஒட்டுண்ணி புழுக்கள் அவரின் கல்லீரல் பகுதியில் முட்டையிட்டு தொற்று ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தான் அவரது கல்லீரலில் தொற்று ஏற்பட்டு அவர் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
ஒட்டுண்ணிகளால் அவருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளதை அறிந்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இதனால் அவரின் பாதி கல்லீரலை அகற்றும் நிலை ஏற்பட்டது. சரியான நேரத்தில் நடந்த அறுவை சிகிச்சை காரணமாக அவர் மிகப்பெரும் ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.