"சிஸ்டர் எங்க, இங்க இருந்த 'கத்திரி'ய காணோம்???” ”...அது பேஷண்ட் வயத்துல வெச்சு தைச்சுட்டீங்க, டாக்டர்...!" - ஆபரேஷன் போது, அதிர்ச்சி கொடுத்த சீனியர் 'டாக்டர்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவின் திரிச்சூர் பகுதியை அடுத்த கனிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜோசம் பால். 55 வயதான அவருக்கு கணையத்தில் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்த சீனியர் மருத்துவர் பாலி டி ஜோசப் என்பவர் தவறுதலாக கத்தரிக்கோலை பாலின் வயற்றில் வைத்து தைத்து விட்டார். இதன் காரணமாக, அந்த கத்தரிக்கோலை அகற்ற மீண்டும் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட மருத்துவரை விசாரிக்க வேண்டும் என நோயாளியின் குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நோயாளியின் மனைவி கூறுகையில், 'எனது கணவர் ஹெடைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தனியார் மருத்துவமனையில் எங்கள் செலவு செய்ய முடியாது என்பதால் அரசு மருத்துவமனைக்கு சென்றோம். முதலில் மருத்துவ கல்லூரியின் இரைப்பை மற்றும் குடலியல் நிபுணரான டாக்டர் ஒருவரை அணுகினோம். அவர் தான், டாக்டர் பாலியை பரிந்துரை செய்து வைத்தார்.
ஆனால், தன்னை அரசு மருத்துவ கல்லூரியில் சந்திக்க செய்யாமல் தனது சொந்த மருத்துவமனைக்கு ஆலோசனைக்கு வருமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து அறுவை சிகிச்சியை சிறந்த முறையில் செய்து முடிக்கவும் பத்தாயிரம் ரூபாய் எங்களிடம் இருந்து வாங்கிக் கொண்டார். தொடர்ந்து அடுத்த 10 நாட்களில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அது முடிந்த இரண்டு வாரத்தில், அவரது குடலில் மீண்டும் தொற்று இருப்பதாக கூறி, மூன்றாவதாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என எங்களிடம் வலியுறுத்தினர்.
இதில் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து வேறொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது தான் வயற்றில் கத்திரிக்கோல் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து தனியார் மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்து கத்தரிக்கோலை அகற்றினோம். இதற்கு பின், மருத்துவர் பாலியை அணுகி இது தொடர்பாக பேசினோம். அரசு மருத்துவமனையில் எதற்காக பணம் வாங்கினார் என தெரியவில்லை. இதே போல வேறு நோயாளிகளிடமும் பணம் வசூல் செய்து இருக்கலாம். இதன் காரணமாக எனது கணவரின் உடலுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருந்தால் என்னவாகி இருக்கும்?' என கூறியுள்ளார்.
சீனியர் மருத்துவர் ஒருவரின் அலட்சியத்தால், அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
