”தொண்டை வலிக்குதுன்னு சொன்னாங்க... செக் பண்ணி பாத்தா, தொண்டைக்குள்ள ’உயிரோட’ ஒரு புழு ஓடிட்டு இருக்கு... அவங்க சாப்டது இந்த மீன் தான்...!”- அதிர்ச்சியடைந்த டாக்டர்கள்!!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jul 14, 2020 12:18 PM

டோக்கியோவைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவரின் தொண்டை டான்சில் சிக்கியிருந்த 3.8 சென்டிமீட்டர் நீளமுள்ள புழுவை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

tokyo complain throat pain doctor find black moving worm inside

பொதுவாக காய்கறிகளை தவிர மற்ற இறைச்சிகளை சமைத்தே உண்பது நல்லது. இல்லையென்றால் அதிலிருக்கும் சிறு நுண்ணிய கிருமிகள் நம் உயிரையே பறிக்கும் அளவிற்கு ஆபத்தானதாக மாறும். அப்படியொரு சம்பவம் தான் தற்போது டோக்கியோவை சேர்ந்த இளம்பெண்ணுக்கு நடந்துள்ளது.

டோக்கியோவைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் சில மாதங்கள் முன்பு ஜப்பானின் புகழ்பெற்ற உணவான சுவையான சில சஷிமி எனப்படும் சமைக்காத மீன் சோயா சாஸுடன் பரிமாறப்படும் உணவை சாப்பிட்டுள்ளார். ஆசிய நாடுகளில் காணப்படும் பிற பிரபலமான உணவுகளைப் போல் இல்லாமல், இந்த உணவு சுவையானது மற்றும் பாதுகாப்பானது என்று உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் நம்புவதால் இதனை சாப்பிட்டு வருகின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக அப்பெண் சாப்பிட மீனில் சூடோடெரானோவா அஸராசி என்ற விலங்கியல் பெயரால் அழைக்கப்படும் ஒட்டுண்ணி புழு இருந்துள்ளது. இதன் காரணமாக சில நாட்களுக்கு பிறகு அப்பெண்ணிற்கு கடுமையான தொண்டை வலி ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவரது தொண்டை டான்சில் 3.8 சென்டிமீட்டர் நீளமுள்ள  'கருப்பு நகரும் புழு'வை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவர்கள் மேற்கொண்ட சிறந்த சிகிச்சையின் மூலம் தற்போது பெண்ணின் தொண்டையில் எந்த சேதமும் ஏற்படாமல் புழுவை அகற்றியுள்ளனர். இந்த சம்பவம் தங்களுக்கே அதிர்ச்சியளிக்கும் விதமாகவும், சவால் அளிப்பதாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags : #FISH #WORM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tokyo complain throat pain doctor find black moving worm inside | World News.