கனடாவிலிருந்து கடல் கடந்து வந்த 'பொங்கல் வாழ்த்து'... வணக்கம் சொல்லி வாழ்த்திய பிரதமர் 'ஜஸ்டின் ட்ரூடோ' ...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Jan 16, 2020 11:15 AM

பொங்கல் திருநாளை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Canada\'s Prime Minister Justin Trudeau has greeted Tamils

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைத்திருநாளான முதல் நாள் நெல் அறுவடை செய்து, சூரியனை வணங்கி, பொங்கல் வைத்து வழிபடுபது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழர் கலாச்சாரத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தமிழில் வணக்கம் தெரிவித்து தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.

தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மதித்து வாழ்த்து தெரிவித்துள்ள கனட பிரதமரின் பதிவு தமிழர்களிடையே  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CANADA #PRIMEMINISTER #JUSTIN TRUDEAU #GREATED PONGAL