பெயரை மாற்றிக்கொண்ட பிரதமர்...ட்விட்டரில் ட்ரெண்டாகும் மோடியின் புதிய பெயர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 17, 2019 02:46 PM

பிரதமர் மோடி தன்னுடைட ட்விட்டர் பெயரை அதிரடியாக மாற்றியுள்ள விஷயம் இந்தியா முழுவதும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

PM Modi becomes \'Chowkidar Narendra Modi\' on twitter goes trending

நரேந்திர மோடி என்று ட்விட்டரில் இருந்த தன் பெயரை பிரதமர் மோடி, சௌகிடார் நரேந்திர மோடி என பெயர் மாற்றம் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட இன்னும் பல யூனியன் மினிஸ்டர்களும் தத்தம் பெயர்களை மாற்றியுள்ளனர்.

ஊழல், சமூக அநீதிகளுக்கு எதிராக பிரதமர் தொடங்கியுள்ள புதிய #MainBhiChowkidar என்கிற ஹேஷ்டேகின் கீழ், அனைவரும் தங்களை ஊழலுக்கு எதிராக பாடுபடக் கூடிய இந்தியாவின் கடைநிலை ஊழியர்கள் அல்லது காவலர்கள் என பிரகடனப்படுத்தும் இந்த முயற்சியை மோடி தொடங்கியுள்ளார். 

நாட்டுக்கு சேவை செய்ய இத்தகைய முனைப்பினை முன்னெடுத்துள்ள தான், இதனை தனியாக செய்யவில்லை என்று மோடி குறிப்பிட்டுள்ளார். 

Tags : #NARENDRAMODI #PRIMEMINISTER #CHOWKIDARNARENDRAMODI #AMITSHAH