"'கொரோனா' காலத்துலயும் சிறப்பா 'கல்லா' கட்டுனதுனால,,.. புதுசா '7,000' பேருக்கு வேலை,,." - அசத்தலான அறிவிப்பு வெளியிட்ட 'முன்னணி' நிறுவனம்!!!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமேசான், இந்தாண்டு இறுதிக்குள் 7,000 பேரை இங்கிலாந்தில் புதிதாக பணிக்கு சேர்க்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, கடந்த சில மாதங்களில் மக்களுக்கு நேராக சென்று ஷாப்பிங் செய்ய வசதி இல்லாத நிலையில், அனைவரும் ஆன்லைன் மூலம் தங்களுக்கு பிடித்தமான உடைகள் முதல் அனைத்து பொருட்களையும் வாங்கி வருகின்றனர். இதனால், இத்தகைய கடினமான காலகட்டங்களிலும் தங்களது ஆன்லைன் வணிகம் அதிக லாபம் அடைந்துள்ள நிலையில், இந்த முடிவை அமேசான் நிறுவனம் எடுத்துள்ளது.
இங்கிலாந்தில் அமைந்துள்ள அமேசான் நிறுவனத்தின் அலுவலகங்கள், விநியோக நிலையங்கள் உட்பட பல இடங்களில் பணிகளுக்கு ஆட்களை சேர்க்கவுள்ளது. ஏற்கனவே, இந்தாண்டு ஆரம்பத்தில் 3000 பேர் வரை இங்கிலாந்தில் பணியமர்த்தியுள்ள நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் பிரிட்டனில் மட்டும் 40,000 ஊழியர்களை அமேசான் நிறுவனம் தயார் செய்யவுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, பிரிட்டனில் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பிற பாரம்பரிய தொழில்கள் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பின்மை அங்கு அதிகரித்து வருகிறது. ஆனால், மறுபக்கம் ஆன்லைன் வர்த்தகம் சிறந்த உயரத்தை எட்டி வருகிறது.
இங்கிலாந்தில் சுமார் 50 அமேசான் தளங்கள் உள்ள நிலையில், இன்னும் புதிதாக இரண்டு தளங்கள் திறக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் ஆயிரம் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தவும் அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. புதிய வேலைவாய்ப்புகளில் இன்ஜினியர்கள், மனித வளங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் நிதி வல்லுநர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.