VIDEO: 'மளமளவென பரவும் காட்டுத்தீ.. ஒருவர் பலி!'.. ஆயிரக் கணக்கானோர் வெளியேற்றம்.. கடந்த வருடம் 84 பேரை இழந்த கலிபோர்னியாவுக்கு மீண்டும் சோதனை!
முகப்பு > செய்திகள் > உலகம்ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ள அமெரிக்க மாகாணங்களில் கலிபோர்னியா முக்கியமானதாக இருக்கிறது. இந்த சூழலில் தற்போது கடுமையான காட்டுத்தீயினை கலிபோர்னியா மற்றும் சான் பிரான்சிஸ்கோ எதிர்கொண்டுள்ளன.

வடக்கு கலிபோர்னியாவில் மின்னல் தாக்குதலால் வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டு கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 11 ஆயிரம் மின்னல் தாக்குதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர் ஒருவர் பலியாகி உள்ளதாகவும், மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலிபோர்னியா மட்டுமல்லாது சான்பிரான்சிஸ்கோவினால் காட்டுத் தீயினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 20 ஆயிரத்து 534 ஏக்கர் நிலப்பரப்பில் நிலங்கள் இந்த காட்டுத் தீயினால் சேதமாகி உள்ளதாக தெரிகிறது. கடந்த நான்கு வருடங்களாகவே இப்படியான காட்டுத்தீயினால் பெரும் பாதிப்பை கலிபோர்னியா சந்தித்து வருவதும், கடந்த வருடம் மோசமான அளவில் காட்டுத்தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்டதும், அனைவரும் அறிந்ததே.
Currently there are 367 #CaliforniaFires - this one in Napa County pic.twitter.com/RNGxZpbN9x
— Akif Malik 😷 (@akifmalik) August 19, 2020
இதேபோல் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீயிற்கு 84 பேர் பலியாகியதும், சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகியதும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நெருப்பில் எரிந்த நாசமாகியதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
