‘உலகின் பிரபலமான டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி..’ வைரலாகும் ட்ரைலர்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jul 29, 2019 03:14 PM

உலகம் முழுவதும் பிரபலமான MAN vs WILD என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இதன் ட்ரைலர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Narendra Modi to Feature on Bear Grylls Man Vs Wild

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற நிகழ்ச்சி MAN vs WILD. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதன்மூலம் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். வன உயிரினங்களின் தன்மையைப் பற்றிக் கூறும் பியர் கிரில்ஸ் காட்டுக்குள் சிக்கிக் கொண்டால் உயிர் பிழைப்பது எப்படி என்பதை விளக்கும் சாகசப் பயணமே இந்த நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பியர் கிரில்ஸ் உடன் இந்திய காடுகளில் பயணம் செய்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பியர் கிரில்ஸ், “180 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு பிரதமர் மோடியின் தெரியாத இன்னொரு பக்கம் தெரியப் போகிறது. வன விலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர் இந்திய வனப்பகுதிக்குள் பயணித்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

மோடி பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கு முன் கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

Tags : #MANVSWILD #PMMODIONDISCOVERY #BEARGRYLLS #VIRAL #TRAILER #INDIA #FOREST