‘ஊழல்’ புகார் விசாரணையால்... ‘பிரபல’ வீரர் அதிரடி ‘இடைநீக்கம்’... ‘கிரிக்கெட்’ நடவடிக்கைகளில் ஈடுபட தற்காலிக ‘தடை’...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Feb 20, 2020 04:02 PM

கிரிக்கெட் வீரர் உமர் அக்மலை திடீரென சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது.

PCB Suspend Umar Akmal Under Anti Corruption Code Ahead Of PSL

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதன் மூலம் அவர் எந்தவிதமான உள்நாட்டு கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியாது. அவர் மீது ஊழல் விசாரணை நடந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டு என்பது குறித்து எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை.

பாகிஸ்தானில் நடைபறும் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர் அணி சார்பாக விளையாட உமர் அக்மல் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. முன்னதாக பாகிஸ்தான் அணிக்கான உடல்தகுதித் தேர்வில் பங்கேற்ற உமர் அக்மல், பயிற்சியாளரிடம் தனது உடல் தகுதியை நிரூபிக்க ஆடைகளைக் களைந்து நின்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தபோதே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags : #CRICKET #PAKISTAN #UMARAKMAL #PCB #SUSPEND #BAN